Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.392.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பதாம் அதிகாரம்.

பரமான்மா.


2. ஆன்மாவி னன்றிபர மான்மா வெளிப்படற்கு

வன்பளி வில்லையிடம் மற்று.

392.


குறள் விளக்கம்.

பரமான்மாவாம் கடவுள் உண்மை வெளிப்பட்டு விளங்கும் இடம் ஆன்மாவேயாம். இதில், அருள் உணர்வாகி, தூய மனக்கண்ணுக்கு அல்லது சுத்த தயவுக்குத் துலங்கும்.

இதுவன்றி, வான்வெளி முதல் இப் பூ மண்டலம் வரையும் உள்ள பிரபஞ்சத்தும் மற்ற எந்த இடத்தும். கடவுள் உண்மை பூரணமாய் வெளிப்படாது.

கடவுள் தத்துவ சித்தியின் ஏகதேச விளக்கம், சாத்திரங்களிலும், சிற்பத் திருவுரு சேர் ஆலயங்களிலும் காட்டியுள்ளதின் நோக்கம், புறத்தே இவற்றைக் கண்டு அறிந்து அக ஆன்மாலயத்தில் விளங்கும் அருட்பெரும் கடவுளை உணர்ந்து கொள்ளலேயாகும்.