Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.391.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பதாம் அதிகாரம்.

பரமான்மா.

1 ஒன்றாம் கடவுளே ஓதும் பரமான்மா

மன்றாம் அலகிலான் மா.

391


குறள் விளக்கம்.

அணுத்துவமாக உள்ள ஆன்மாவைப் பற்றி முன் அதிகாரத்தில் ஒருவாறு கூறிய பின், இவ்வதிகாரத்தில், அவ்வான்மாவுக்கு உள் இருக்கும் பரமான்மாவைப் பற்றிக் கூறப்படுகின்றதாம்.

பரமான்மா, பரம்பொருள், மெய்ப் பொருள், கடவுள் எல்லாம் ஒன்றையே குறிப்பதாம். உலகுக்கெல்லாம் பரமான்மாவாகிய கடவுள் ஒன்றே. இந்தப் பரமான்மாவுக்கு, உலகெலாம் உள்ள அலகிலா (எண்ணிலடங்கா) ஆன்மாக்கள் யாவும் ஆலயங்களாம்.

இப்படி, ஒரே பரமான்ம, அனந்தங் கோடி ஆன்மக் கோயில்களில் எப்பொழுதும் எழுந்தருளி நின்று, உலகத்தை யாவும் ஆள்கின்றது என்பது, பகுத்தறிவுக்கு விளங்காத ஒன்றேயாகும். இந்த உண்மையை உள்ளபடி காண்பதுவே கடவுள் ஞானம்.

மன்று = ஆலயம்.