Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.387,

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தொன்பதாம் அதிகாரம்.
ஆன்மா

7.
பரமழியா தோங்கும் படிதோன்றுஞ் சீவன்
உருவளர நின்றொடுங் கும்.
.
387.

குறள் விளக்கம்.
இப்பூமியில் ஆன்மாக்கள் அகப் பரம்பொருளின் சேர்க்கை கொண்டு ஓங்கிடலால், அவைகளில், தொடர்ந்து, சீவ சக்தி வெளிப்படுவதும், உள் அடங்குவதும் ஆக இருக்கிறது. அவ்வுயிர்ச் சக்தி மலர்ந்து விளங்கும் தருணம் தான் சூழும் தேகம் வளர்ந்து புறப் புலன் உணர்வு வாழ்வு தழைக்கின்றது. மேற்படி உயிர்ச்சக்தி ஒடுங்கி விட்டவுடன் ஆன்மா பிரிய, உடல் இறந்து பட்டு ஒழிகின்றது. மறுபடியும் அந்த ஆன்மாவில், ஜீவ மலர்ச்சி தோன்ற வேறொரு தேகம் அதனைச் சூழ தோன்றி வளருகின்றதாம்.