Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.384.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தொன்பதாம் அதிகாரம்.
ஆன்மா

.4
ஆன்மபரி பாகத்தால் ஆகும் பரம்தானாய்
வான்தயவே வள்ளலுரு வாய்ந்து.
384

குறள் விளக்கம்
அபக்குவ நிலையில் ஆன்ம அணுவாய் உள்ள ஒன்றே, பக்குவ மனித தேகத்தில் சுத்த தயா ஒளியாய் விரிந்து நிறைந்து, தேகத்தையே தயா ஜோதி வடிவக்க்கிக் கொண்டு நிலவும். இப்போது ஆன்மா என்ற நிலை மாறி தயாபரன் உருவாக ஆக்கப் பெற்றுள்ளதாய் அறியப்படும்.
ஆன்மப்பசு, இருவினை யொப்பால் மலபரிபாகமுற்று, சந்நிதிபாதம் அடைந்து திருவருளால் பாசம் நீங்கி பதியுரு ஆகும் என்பது வேதாந்த முடிவாம் சைவ சித்தாந்த உண்மை.