தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தொன்பதாம் அதிகாரம்.
ஆன்மா
|
.3
|
உயிரும் உணர்வும் ஒளிரும் அணுஒன்(று)
இயலுற்ற ஆன்மா இது.
|
383
|
குறள் விளக்கம்.
சாதாரண பூத அணுக்கள் போல் அல்லாது இவ்வான்ம அணுவினின்று ஜீவ சக்தியும், தேகேந்திரிய உணர்வும் வெளிப்படும் இயல்பு கொண்டதாம். ஓர் உடம்பில், இச்சக்திகள் வெளிப்பட்டு விளங்கும்போதுதான் ஆன்மாவின் இருப்பு தெள்ளிதில் உணரப்படும்.
ஆன்மா பிரிந்தபின், சடலம் வெற்றுச் சடப் பொருளாக, பிண உடம்பாக, இயல் கெட்டு அழிந்து போம். சீவ தசையில் உடல் முற்றும் வியாபித்தும் பிரகாசிப்பதும், மரணத்தால் மறைந்து ஒழிந்து போவதும் ஆன்ம ஜோதியின் இயல்பாகும்.
Write a comment