Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.381.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
ஆன்ம ஒழுக்கம்
முப்பத்தொன்பதாம் அதிகாரம்.
ஆன்மா

.1
எல்லாஞ்செய் வல்ல இறைசக்தி கொண்டவொரு
சொல்லார் அணுஆன்மா சூழ்.
381

குறள் விளக்கம்.
உயிர் ஒழுக்கம் நிரம்பி மேல் ஆன்ம ஒழுக்கம் கொள்ளப்பட வேண்டி உள்ளதால், அதற்கடுத்து இவ்வதிகாரம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆன்மா என்பது யாது எனின், எல்லாம் செல்ல வல்ல கடவுட் சக்தியைத் தன்னகத்தே அடக்கி கொண்டுள்ள ஒரு சிற்றணுவாம். இது ஒரு ‘சொல்லார் அணு’ என்றது – ஓங்காரமாகிய ஒற்றை எழுத்து கடவுலைக் குறிக்கும் உயர்வுடைய சிறப்பு வாய்ந்த ஒரு சொல்லாம். இக்கடவுட் பிரணவ அணுவே ஆன்மா என்றறிதல் வேண்டும்.
இவ்வோர் அணுவைச் சூழ்ந்தே தேகாதி தோற்றம் உண்டாகின்றன. இச்சுழ் உரு இல்லாமல், அதிலும் பக்குவ மெய்யறிவு இல்லாமல் ஆன்ம சிற்றணுவைக் காண முடியாது. இவ்வான்ம ஒழுக்கத்தால் கடவுட் சக்தியாம் அருள் அனுபவத்தைப் பெற்று ஆன்ம இன்ப லாபம் அடைய வேண்டியுள்ளோம்.
P Sujatha
கருணைமிகு சன்மார்க்க அன்பர்களுக்கு,
எல்லா ஜீவர்களிடத்தும் இறைவன் ஆத்ம தயவு வடிவாக இருக்கிறார்.மனித தேகத்தை பெற்ற நாம் அந்த தயவு வடிவத்தை அறிந்து உணர முதலில் எல்லா உயிர்களையும் அன்பு செய்ய வேண்டும்.நம்மில் இறைவனை அறிவதோடு
எல்லா உயிர்களிடமும் இறைவனை கருணை தயவால் காண வேண்டும்.இரக்கம்தான் இறைவன்.புறத்தில் இறைவனை தேட வேண்டாம். "உயிர் குலமே கடவுள் விளங்கும் ஆலயம்.".கடவுள் ஒளியை நமக்குள் காண வேண்டும்.உயிர்கள் நேயம் வந்தால் தான் ஆன்ம நேயம் வரும்,ஆன்ம நேயம் வந்தால் தான் மனித நேயம் வரும்.உண்மை கடவுள் குருவை துணையாக கொண்டு ஆன்ம விளக்கம் பெற்று கடவுள் மயம் ஆவோம்.வள்ளலார் கருணையாக,அருள்ஜோதிசுஜாதா.
Thursday, January 14, 2010 at 04:12 am by P Sujatha