Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.375.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தெட்டாம் அதிகாரம்.
சீவ தயவு.

.5
குற்றங் களைந்து குருநெறிக் கண்புகுந்த
மற்றிங் கொறுத்தல் மதி.
375

குறள் விளக்கம்.
தயவு விளக்கம் தரும் குரு நெறியில் பற்று உண்டாகும்படி நம்மைச் சூழ்நரை வலியுறுத்தல் வேண்டும். இதற்காக அவர்கள் இடந்துள்ள தயவுக்குத் தடையான குற்றங்களை ஒழிக்க முயல வேண்டும். முரண்பட்டு இருப்போரைக் கண்டித்து அல்லது கடிந்து கூறித் திருத்தி வழிக்குக் கொண்டு வரல் வேண்டும். இப்படிச் செய்வது தான் அறிவுச் செயலாகும். இதுவே சீவ தயா ஒழுக்க நெறியாம்.