Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.373

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தெட்டாம் அதிகாரம்.
சீவ தயவு.

3
மாற்றமில் லீகை வருமுயிர்க் கன்பால்
ஏற்றிடுந் தன்னிலை யீந்து.
373

குறள் விளக்கம்.
ஒரு உயிர்க்கு உண்மை அன்பு உண்டாகி, வருசீவர்களுக்கு அவ் அன்பாலே உதவும் போது, கொடுக்கும் உயிரும் அதனைப் பெறுகின்ற உயிரும் மேலான மெய்ப்பயனை அடைகின்றன.
கடவுட் சார்புதைய உண்மை அன்புதான் மனித உள்ளத்தில் மாற்றமில்லாத ஈகையாக வெளிப்பட்டுக் கொண்டே உள்ளதாம்.