தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்.
கொல்லாமை.
|
9
|
பற்றற வுண்ணின்று பாங்குறு சிற்றுயிரை
மற்றழித் தேற்றலும் வாழ்வு.
|
369
|
குறள் விளக்கம்.
கடவுள் தயா செயலறிந்து அதனோடு ஒன்றி உலகியலில் வாழும்போது, நம்மால் அறிந்தும் அறியாமலும் அழிபடுகின்ற சிற்றுயிர்கள் யாவும் கடவுள் தயவுக் காரணமாக, உணர்வு விளக்கம் ஓங்குவதற்கு உரிய உயர் பிறப்புத் தேகங்களில் செலுத்தப் படுகின்றன. ஆகையால், நம் ஆறாக இயற்றப்படுகின்ற, இவ் அழி செயலும் கூட, ஆண்டவர் தம் அருள் செயலே ஆகி, சீவர்களின் நல்வாழ்வுக்குத் துணை புரிகின்றதாம்.
அகத்தே பற்றறப் பொருந்தி நின்றிடாது, அவா முதலிய மாசு நிறைந்த மனத்துடன் பாங்குறு சிற்றுயிர்களை அழிப்பதால் கொலை பழி வந்து பற்றும். ஆதலின், பற்றற்ற தயவுச் செயலால் என்றும் நலமே விளையும். தயவில்லாத எச்செயலும் நலம் தரா.
Write a comment