Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.368.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்.
கொல்லாமை.

8
அழிதொழி லாற்றும் அருளாளன் செய்கை
பழியல பற்றற்ற பண்பு.
368

குறள் விளக்கம்.
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சக்தி அகத்தே இருந்து, ஆக்கலாதி ஐந்தொழிலும் புரிகின்றது. இதனால் ஆன்மாக்கள் அக வளர்ச்சி அடைந்து முன்னேறிக்கொண்டே இருக்கின்றன. இப்படி முன்னேறி, மனிதப் பிறப்பில், ஆன்ம அறிவு உண்டாகி, அருள் அடைந்து முடிவில் ஆனந்தம் அடைகின்றன.
ஆகையால், ஆன்மாக்களுக்கு உடம்புகள் ஆக்கப்படுவதும், அழிக்கப்படுவதும், பற்றற உள் நின்று இயங்கும் பரம்பொருளின் தயாபெருஞ்செயலே ஆகும். மேலும் ஓர் உடம்பு நீக்கப்பட்டு, அடுத்து அதனினும் உயர் அனுபவம் பெறத்தக்க பிறிதொரு உடம்பை நம் பதி தயவோடு வழங்குகின்றார். ஆதலின், இவ் அழிதொழில் பழித்தற்கு உரிய கொலை பாதகச் செயல் அல்ல. புகழ்தற்குரிய கடவுள் தயவுச் செயலேயாம்.