தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்.
கொல்லாமை.
|
7
|
குருநெறி யாவது கொல்லாமை அன்பின்
வருநெறி சேர்க்கும் மகிழ்வு.
|
367
|
குறள் விளக்கம்.
குரு = ஒளி, அறிவு விளக்கம், மெய்யருள் உணர்வு இவை கொடுக்கும் ஒன்று அல்லது ஒருவன் குருவாகக் கூறப்படும்.
உள்ளத்தில் அன்பு தோன்றி, உலகத்தில் செயல்படும்போது, சீவர்கட்கு எல்லா நலமும் உண்டாகும். அன்பினால் தோன்றும் கொல்லாமை மேற்கொண்டால் உலகுயிர்கள் மகிழ்வுறும். இச்செயலால் அன்பொளி ஓங்கும். உள்ளத்தில், குரு தோன்றும்.
அகத்தில் அன்பு பழுத்தால் அருட் குரு வந்து சேர்ந்து, பேரின்ப நிலைக்கு ஏற்றுவார். ஆகவே, உண்மைக் குருவை அடையும் மார்க்கம் கொல்லாமை என்னும் தயா நெறியே. இந்நெறி படராது. உலகில் குருவைத் தேடி அலைந்து அவலமுறுதல் அறியாமை.
Write a comment