Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.362.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்.
கொல்லாமை.

2
உயிரோங்க வுள்ளத் துணர்வோங்க என்றுந்
தயைபுரிவான் கொல்லாமை சார்ந்து.
362

குறள் விளக்கம்.
கொல்லாமை மேற்கொண்டவன் பிற உயிர்களை வாழ்வித்து, உடல் விளக்கமும், சீவ விளக்கமும்,. புறத்தும் அகத்தும் உண்டு பண்ணுவான். கொல்லாமையே தயா நெறிக்கு முதற்படி.
இப்படியேறி, சீவ தயை புரிந்து கொண்டும், அக விசாரம் செய்து கொண்டும் இருந்தால், நித்திய உயிராகிய ஆன்ம விளக்கமும், ஆன்ம இயற்கை ஆகிய அருள் உணர்வு விளக்கமும் தோன்றி வளர்ந்து ஆன்ம இன்பப் பெரும் பயன் தரும்.