Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.361.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தேழாம் அதிகாரம்.
கொல்லாமை.

1
கொல்லாமை யோடுபுலால் கொள்ளாமை தானொருவர்க்
கெல்லா நலந்தரு மிங்கு.
361

குறள் விளக்கம்.
முன் அதிகாரத்தில் புலால் மறுத்தல் கூறப்பட்டது. புலால் பெறுவதற்கு உயிர்க்கொலை செய்யப்படுவதால், புலால் மறுப்பதற்கு கொல்லாமை வேண்டும். அன்றியும் புலால் உண்ணாதோரும் தயை வளர்த்தல் பொருட்டு கொல்லாமை மேற்கொள்ள வேண்டியுள்ளனர். ஆதலால், அப்புலால் மறுத்தலுக்குப் பின் இக்கொல்லாமை கூட்டப்பட்டுள்ளதாம்.
கொல்லாவிரதம் சிறந்தது. கொல்லுவது பாவம், ஆனால் ஒருவன் கொல்லுவதில்லை, பிற ஒருவனால் கொல்லப்பட்டதன் அல்லது தானாய் இறந்து போன ஒன்றன் ஊனை உண்ணுவதும் தயாநெறிக்கு அடுக்காததுதான்.
கொன்றாலும், கொல்லாவிட்டாலும், புலால் உண்டாலே அருள் நலம் பெற முடியாது. எனவே, கொல்லாமையும், அத்தோடு புலால் கொள்ளாமையும் ஆகிய இரண்டும் சேர்ந்தே தயா வாழ்வு தழைக்க உதவுகின்றனவாம்.
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.361.

தினம் ஒரு தயவுக்குறள்-எண்.361.