தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்
புலால் மறுத்தல்.
|
10.
|
அருளுடம் பெய்திடற் காகவே யூனை
யருந்தீர் கொலைநெறி யாய்ந்து.
|
360
|
குறள் விளக்கம்.
நாம் கடவுள் அருள் பெற வேண்டுமானால், சீவர்களிடத்து எப்பொழுதும் தயை காட்டல் வேண்டும். இத்தயவில்லாத, கொலையால் வருகின்ற புலாலை உண்டால் கடவுள் அருள் கிடைக்காது. இக்கொலை தவிர்ப்பதற்காக, தயை வளர்ப்பதற்காக, நன்கு தெளிந்து, புலாலை விட்டொழித்தல் வேண்டும்.
நம் புலையுடம்பு அருளுடம்பு ஆவதற்கு, புலால் மறுத்து, அகமிருந்து அருள் வளர்த்தல் நலம்.
Write a comment