Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.355.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்
புலால் மறுத்தல்.

5.
சத்துவமுஞ் சுத்த தயாவுணர்வுஞ் சேராவே
எத்தும் புலையுண்பார்க் கிங்கு.
355

குறள் விளக்கம்.
புலால் அருந்துபவர்களுக்குச் சத்துவ குண சம்பந்தமும், அதனால் வளர் சுத்த தயா உணர்வும் சிறிதும் ஏற்படா. ஒன்றன் உயிரைப் போக்கித் தனக்கு உணவாக்கிக் கொள்ளல், இரக்கமற்ற வஞ்சனைச் செயலாகும். இது புரிவோர்க்கும் எவ்வகையினும் திருவருள் சேராது. ஆதலின் திருவருள் விழைவோர் புலால் மறுப்பது இன்றியமையாதது.
எத்தும் = எவ்வகையிலும், வஞ்சித்தும்.