தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்
புலால் மறுத்தல்.
|
4.
|
உழைத்தானுக் கில்லா யுரிமைகொண் டுன்போன்
பிழைத்தான் புலையேறப் பெற்று.
|
354
|
குறள் விளக்கம்.
உணவு உற்பத்தி செய்ய உழைக்க வேண்டியுள்ளது. அப்படி உழைப்பவனுக்கே அதன் பயனைக் கொள்ள முதல் உரிமை உண்டு. அவனுக்கு அவ்வுரிமை கிட்டாது பறித்து உண்டு மகிழ்ந்து உடல் பருப்பவன். புலையுடம்பில் மேன்மேலும் பந்திக்கப்பட்டு பிழைக்கின்றான். தவறான வாழ்வு வாழ்கின்றான். அது கூடாது. தயவோடு, உழைப்பவனை வாழ்த்தித் தானும் உழைத்து புலை உடற் பற்றற வாழ்வதே திருவருளாணை.
Write a comment