தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்
புலால் மறுத்தல்.
|
3
|
ஊன்பற்றா வுள்ளத் துணர்வி லெழுந்தயவே
ஊண்கா ணுலவா வுயிர்க்கு.
|
353
|
குறள் விளக்கம்.
புற உடல் வாழ்வுக்கு உணவு உண்ண வேண்டியுள்ளது. அகத்தே உள்ள நித்திய உயிராகிய ஆன்மாவுக்கு சுத்த தயவே உணவாகும். ஆன்ம இன்ப வாழ்வு பெற வேண்டி, நாம் தயை பெருக்குதல் வேண்டும். இதற்குத் தேகத்தினிடத்தும், தேகத்தைப் பெருக்கி தயவைப் போக்கும் ஊன் உணவின் இடத்தும் பற்றறுதல் வேண்டும்.
அகமிருந்து தயை பெருகிப் பெருகி அனகமுற ஊனுடம்பு தயா ஒளி உடம்பாய் மாறி ஆனந்தமடையும்.
ஊண்=உணவு.
Write a comment