தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்
புலால் மறுத்தல்.
|
2.
|
ஊன்கொள்ளான் உள்ளத் துயிர்தயை காண்பானே
நான்சைவ னாவனெனச் சாற்று.
|
352.
|
குறள் விளக்கம்.
சீவதயா உணர்வு நிலைத்து ஒளிரும் உள்ளம் படைத்தோன் புலாலை மறுத்திடுவான். அவனே உண்மைச் சைவனாகச் சொல்லப்படுவான்.
பொதுவாக புலை உணவு தவிர்த்தவர்கள் யாவரும் தயை நிறை உள்ளப் பண்பாட்டால் சைவர்கள் ஆவர். சைவம் என்பது சிவ சம்பந்தம் உடையது. சிவமாவது, சத்து, சித்து, ஆனந்த மயமாம். இத்தன்மை வழங்கும் சுத்த தயா ஆகாரம் ஒன்றே சுத்த சைவ உணவு. இதற்குப் புலால் மறுத்து, சுத்த சத்துவ உணவு கொண்டு அக வாழ்வு வாழ வேண்டும்.
Write a comment