தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தாறாம் அதிகாரம்
புலால் மறுத்தல்.
|
1.
|
புலையுடம்பின் பற்றற்று பொய்யாமெய் சேரப்
புலையுணா நீக்கல் புகழ்.
|
351.
|
குறள் விளக்கம்.
வேற்றுமை இல்லாத அக நிலையில் பொருந்து அவ்வனுபவம் பெர்று வாழற்காகத் தேகப்பற்றை ஒழித்தல் வேண்டும். இதற்கு புலால் மறுத்தல் இன்றியமையாதது. ஆகையால் இவ்வதிகாரம் அதற்கடுத்து வைக்கப்பட்டுள்ளதாம்.
நித்தியமாகிய, சத்தியமாகிய வடிவம் நாம் பெற இப்புலை உடம்பின் பற்றர்று அகமிருந்து வாழ்தல் வேண்டியுள்ளோம். இத்தேகப்பற்று அறுவதற்கு, அசுத்த தாமச ஆகாரமாகிய புலாலை முற்றும் தவிர்த்து, சுத்த சத்துவ உணவை உட்கொண்டு, அக ஓர்மையோடு தயை வளர்த்தல் ஒன்றே நெறியாகும்.
உயிர் அனுபவம் ஆகிய நித்திய ஆன்மானந்தம் பெறுவதற்கு, மெய் (தேகம்) அனுபவமாகிய அநித்திய புலையுடம்பின் தொடர்பு அறுதல் வேண்டும். பேரின்ப வடிவம் உறாத வரையும் புலையுடம்பின் தொடர்பு அறுவதில்லை பிறவிகள் உண்டாகிக் கொண்டேதான் இருக்கும்.
Write a comment