Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.350

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தைந்தாம் அதிகாரம்.
வேற்றுமை

10.
யாவுளு மொன்றாம் அருளொளி கண்டவர்
நோவுறார் வேற்றுமையில் நொந்து.
350.

குறள் விளக்கம்.
தனது அகத்தே அருட்ஜோதி பதியைக் கண்டு கொண்டவன், அந்த ஒன்றான பதியின் தோற்றமே யாவுளும் கண்டு நிற்பதால், அவ்வொன்றைச் சூழ்ந்த புறநிலைத் தோற்ற வித்தியாசங்களை நோக்கி மனக்குழப்பமும், விருப்பு வெறுப்பும் அடைய மாட்டான். அருள் உரிமை கொண்டு அன்பு செய்திருப்பான். வருத்தமும் நலிவுமற்ற இன்ப வாழ்வில் ஓங்குவான்.