Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.349.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தைந்தாம் அதிகாரம்.
வேற்றுமை

9.
சுத்த தயாநெறி சூழினலால் வேற்றுமை
அத்தனையும் போமோ அழிந்து.
349.

குறள் விளக்கம்.
வேண்டப்படாத வேற்றுமைகள் யாவும் நீங்கி ஒழிய வேண்டும் எனில், சுத்த தயா சன்மார்க்கம் ஒன்றே மேற்கொள்ளல் வேண்டும். மர்ற பழ நெறிகளாலும், கற்பனை மார்க்கங்களாலும், நவீன தந்திர முறைகளாலும் குறை முற்றும் நீங்காது.
இதுகாறும் சுத்த தயாநெறி வெளிப்படாததால் அல்லல் தரு வேற்றுமைகள் வளர்ந்து மண்டின. இனி சுத்த தயவால் அவ்வேற்றுமைகள் யாவும் ஒழிந்து போக, யாவர்க்கும் உரிய ராஜபாட்டை திறக்கப்படப் போகின்றது.
nandakumar_90
நல்ல விளக்கம் வெளியிடப்படுகின்றது. தொடரட்டும் பணிகள்.
Friday, December 4, 2009 at 08:27 am by nandakumar_90