தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தைந்தாம் அதிகாரம்.
வேற்றுமை
|
6.
|
உயிரி னனுபவ மோங்கத் தயவுச்
செயல்புரி வேற்றுமை தீர்த்து.
|
346.
|
குறள் விளக்கம்.
தேகப் பற்றற்று அகத்தே உள்ள பேதமர்ற ஒரு தன்மைத்தாய உயிர்களின் இடத்தே ஒருமை மனத்தால் ஒன்றி நின்று யாவரித்தும் வித்தியாசம் இல்லாது தயவு செய்வதால்தான் அவ்வுயிரனுபவம் உண்டாகும்.
அதாவது, தயாஜோதி சக்தி கொண்டிலங்கும் உயிர், தான் என்ற உணர்வு பெருகில் தேக பந்தம் விலகும். அனுபவம் உண்டாகும். மற்றபடி ஆன்மா நான் என்ற பாவனை செய்து கொண்டு தியான நிட்டையில் இருந்தால் மட்டும் உயிரனுபவம் வந்திடாது.
Write a comment