Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.345.


இது கார்த்திகை மாதம்-திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் எழில் தோற்றம்-மதுரை மாவட்டம்.
தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தைந்தாம் அதிகாரம்.
வேற்றுமை

5.
உயர்வுதாழ் வென்னும் உலகறி வேற்றுமை
தயவுடையார் காணார் தனித்து.
345.

குறள் விளக்கம்.
உலகில் வாழ் மனிதரிடை தோன்றும் பலவாகிய வித்தியாசங்களை எல்லாம், சுத்த தயவுடையவர்கள் பிரித்து நோக்கி மதியார்கள்.
உயர்வும், தாழ்வும் புறத்தே தோன்றி மதிப்பதற்கும் அவமதிப்பதற்கும் செய்து மனித உள்ளத்தில் மெய்யன்பு உதிக்கத் தடையாய் இருக்கும்.
அக உண்மையாகிய ஆன்ம இயற்கை என்னும் தயை பூண்டோர் சமநோக்கோடு யாவரிடத்தும் அன்பு செலுத்தி மகிழ்வார்கள்.
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.345.

தினம் ஒரு தயவுக்குறள்-எண்.345.