தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தைந்தாம் அதிகாரம்.
வேற்றுமை
|
4.
|
தேசப்பற் றாலே செருவிளைக்கும் வேற்றுமை
மாசற்றால் வாழும் மகி.
|
344.
|
குறள் விளக்கம்.
எந்நாட்டவர்க்கும் இறைவன் நம் அருள் அம்பலத்தரசு ஒன்றேயாம். இவ்வுண்மை கண்டு, தன் தேசம் தாய் நாடு என்றும், பிறர் நாடு என்றும் பிரித்துத் தன் நாட்டின் மீது பற்று மிக வைத்து, பிற நாட்டைச் சிதைக்க முயலுதல் பெருங்கேட்டை விளைவிக்கும். பகைமையும், போருமே தோன்றும்.
எனவே, வேற்றுமை உணர்ச்சி விடுத்து எல்லோரும் இன்புற்று வாழ உளம் கொள்ளல் வேண்டும்.
செரு = பகைமை, போர்.
“யாதுமூரே யாவருங் கேளிர்” என்றதன் கருத்தை நன்கு உணர்ந்து வாழல் வேண்டும்.
Write a comment