Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.343.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தைந்தாம் அதிகாரம்.
வேற்றுமை

3.
மேல்வண்ணங் கொண்டுவளர் வேற்றுமையை வேரறுத்துப்
பால்வண்ணத் தன்பாற் பழகு.
343.

குறள் விளக்கம்.
மனிதர்களின் புறத்தோற்ற நிறமும் தன்மைகளும் காரணமாக வளர்கின்ற வேற்றுமை உணர்ச்சியும்கூட சண்டைகளுக்கும், கொலைகளுக்கும் இடம் கொடுக்கின்றன.
இவை ஒழிய புற நிறப்பற்றை விடுத்து, அக உண்மை ஒற்றுமை பற்றி தூய அன்போடு வாழப் பழகுதல் வேண்டும். வேற்றுமை உணர்ச்சிதான் உலகியலில் தீவினை எல்லாம் தழைக்க மூலமாய் உள்ளதால் அதனை வேரறுக்க வேண்டும். இல்லை எனில் நலம் விளையாது.