தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து நான்காம் அதிகாரம்.
முந்நிலை.
|
10.
|
பக்குவத்தா ளான்மா பதியுருவ மேற்குமே
முக்கலராந் தன்மை முடித்து.
|
340.
|
குறள் விளக்கம்.
ஆன்மாக்கள் பக்குவ நிலைக்கு ஒப்ப மூன்று வகையாய்க் கூறப்படுவர். மும்மலம் உடையோர் சகலர் என்றும், கன்னமாகிய ஒரு மலம் நீத்தோர் பிரளையாகலர் என்றும், கன்மம், மாயை ஆகிய இரு மலம் நீத்தோர் விஞ்ஞான கலர் என்றும் உரைக்கப்படுகின்றனர்.
இவ்விஞ்ஞானகல ஆன்மா ஆணவ மல மாத்திரம் இருந்து, பதி உண்மை உணர்ந்து, அருள் நிறைவால் ஆணவமற, அப்பதியோடு இரண்டற்று அதுவே தானாய் தானே அதுவாய்த் திகழும்.
ஒரு ஆன்மாவே பக்குவப்படப்பட சகல நிலையிலிருந்து, பிரளையாகல நிலையும், பின்னர் விஞ்ஞானகல நிலையும் அடைந்து, திருவருட் பூரணத்தாலே, இம் முந்நிலை கடந்து பதியுரு எய்துகின்றதாம்.
Write a comment