தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து நான்காம் அதிகாரம்.
முந்நிலை.
|
9.
|
சூழுவோ ரெல்லாம் துரையருள் நம்மினம்
வாழுறக் கொண்டுநீ வாழ்த்து.
|
339.
|
குறள் விளக்கம்.
இனம் இனத்தைச் சாரும் என்ற விதிக்கொப்பவே ஓரினமாகிய மனித உயிர்கள் திருவருளால் கூடி வாழ்தல் கடவுளாணையாம். ஆதலால், உலகில் நம்மை அடுக்கும் எவரும், நம் பதி அருளால் வருகின்ற நம்மவராகக் கொண்டு நல் வாழ்வுக்கு வேண்டும் அன்பும், அறிவும் உதவுதல் வேண்டும்.
முக்குண பேதத்தால், பக்குவாபக்குவ காரணத்தால் மனிதர்கள் உயர்ந்தாரும், ஒத்தாரும், தாழ்ந்தாருமாக புறத்தோற்றம் கொண்டுள்ளனர். அகம் உணர்ந்து சம நோக்கோடு தயை புரிதல் சன்மார்க்கமாம்.
Write a comment