Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.338.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து நான்காம் அதிகாரம்.
முந்நிலை.

8.
உடையான்ற னாணை யொருவா தவனே
அடைவான் றனைப்போற் றறிந்து.
338.

குறள் விளக்கம்.
உயிராகிய நம் ஆன்ம அகத்து உடையவன் சதா தயா ஆணை செய்து கொண்டுள்ளான். அந்த ஆணையின்படியே அவனே புறத்தும் பல்வேறு வடிவொடு நம்மைச் சூழ்கின்றான்.
நமது அகங்காரம் ஒழிந்து, நம் பதியுரு கொண்டு மகிழவே நம்மில் இரண்டற அருவுருவாய்த் தோன்றாத் துணையாய் இருப்பதும், அருவாய் அகத்தில் மறைந்து நின்று ஆணை செய்கின்றதும். உருவாய் புறத்து அணைந்து உதவுகின்றதும் ஆகிய முந்நிலையுறு பதி நிலை கண்டு போற்றிப் புகழ்ந்து பொய் கெட்டு மெய்யாதல் வேண்டும்.