தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து நான்காம் அதிகாரம்.
முந்நிலை.
|
7.
|
உளத்தே கடவுள ரொன்றியுயிர் மெய்யில்
வளத்தை யளிக்கும் வளர்ந்து. |
337.
|
குறள் விளக்கம்.
உயிராகிய ஆன்மாவின் உளத்தே கடவுள் சக்தி நிரம்பி உள்ளது. அதுவே திருவருளால் இத்தேகத்தில் ஜீவனாய், புலன் உணர்வாய், மெய்யறிவாய் விரிந்து பக்குவப்படுத்துகின்றதாம்.
இத்தேகம் தூல, சூக்கும, காரணமாகிய முந்நிலை கொண்டு வளர ஆதாரமாய் உள்ளதும் அவ்வகப் பெரும் கடவுள் சக்தியேயாம். இவ்வுண்மையைக் குறிக்கவே நம் தமிழில், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மும்மெய் இனங்கள் காட்டப்பட்டுள்ளன.
Write a comment