தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து நான்காம் அதிகாரம்.
முந்நிலை.
|
6.
|
தன்மையும் முன்னிலையும் சாற்றும் படர்க்கையும்
அன்னிய மில்லை யகம்.
|
336.
|
குறள் விளக்கம்.
அகம் என்பது ஆன்மா. இது கடவுள் தன்மையானது. இதுவே நமது உண்மை வடிவம். ஆதலால் தன்மை என்பதற்கு, நான், நாம் என இலக்கணம் வகுத்துள்ளனர்.
இவ்வான்மாவே நாமாய் இருப்பதன்றி, நம் முன்னிலையில் தோன்றும் நீ, நீர், நீங்கள் ஆகவும், படர்க்கை இடத்தே தோன்றும் அவன், அவள், அதுவாகவும் உள்ளனவாம். ஆகவே, ஆன்மாதானே மூன்று நிலைகளிலும் தோன்றி உள்ளதாக அறிய வேண்டும்.
மேலும், நமது ஆன்மாவே ஆண்டவர்க்கு நிலையமாக இருப்பதும், அவரே தன் அருளால் எல்லா ஆன்மாக்களாகத் தோற்றி நம்மைச் சூழ்வதும் அறியப்படலால், நமது ஆன்மாவுக்கு அன்னியமாக ஒன்றில்லை. அதுவே யாவுமாய்த் தோற்றி விளங்குவது என்றும் கண்டு கொள்வோமாக.
Write a comment