தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து நான்காம் அதிகாரம்.
முந்நிலை.
|
5.
|
ஆருயி ரொன்றே யளவிலா வாற்றலுறப்
பாருரு வேற்கும் பல.
|
335.
|
குறள் விளக்கம்.
கடவுள் சக்தியோ அளவில் அடங்காதது. அதனை அறிவதற்கும் திருவருளால் அடைவதற்கும் ஓர் உயிர்க்கு ஒரு இறப்பும், ஒரு தேகமும் போதாது. தொடர்ந்து பல பிறப்புகளில் சிறிது சிறிதாக அறிவு வளர்ந்து, முடிவில் மனிதப் பிறப்பில் கடவுள் ஞானம் அடைந்து, அருளாலே அருட்பெருஞ் சக்தியைப் பெற்று பெருவாழ்வு அடைகின்றதாம்.
பார்+உரு (பாருரு) இவ்வுலகில் உண்டாகும் பிறவி வடிவம்.இவ்வடிவங்கள் மண் கூறு மிகுத்து உள்ளதால் பார் உருவாக உள்ளனவாம்.
Write a comment