தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து நான்காம் அதிகாரம்.
முந்நிலை.
|
4.
|
தோற்றத்தைக் கண்டேனுஞ் சொற்செயலைக் கொண்டேனும்
ஏற்றத்தாழ் வெண்ணா திரு.
|
334.
|
குறள் விளக்கம்.
உயிர்நிலை ஒன்று. அதில் மலரும் திருவருள் ஏகதேசம், மனோ வாக்கு, காயங்களில் காரியப்படுகின்றது. அருட் பூரணம் அடைவதற்கு அகத்தினின்று தயாவுணர்வு அனகத்தே நிரம்ப வேண்டும்.
ஆதலால், புற வடிவத் தோற்றத்திலும், பேசுகின்ற பேச்சு முதலியவற்றிலும், செய்கின்ற செயல்களிலும் பற்று வைத்து நோக்கி, விருப்பு, வெறுப்பு அடைந்து அழியாது, பற்றற உண்ணின்று, சமநோக்கோடு தயை வளர்த்தல் வேண்டும்.
Write a comment