Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.331.

தயவுக்குறள்
சுவாமிசரவணானந்தா.
முப்பத்து நான்காம் அதிகாரம்.
முந்நிலை.

1.
அகமொக்கு மான்மா அகப்புற மூன்றுந்
தகவந் துதிக்குஞ் சகத்து.
331.

குறள் விளக்கம்.
உயர்திணையாம் மனித இனத்தில் உட்பிரிவாக உள்ளது இம்முந்நிலை. இது சாயுச்சிய அனுபவம் பெறாத கீழ் தர மனித உயிர்நிலையின் பாற்பட்டதே. ஆதலின் இங்கு இவ்வதிகாரம் வந்ததாம்.
ஒரு தன்மைத்தாகிய சுத்த ஆன்மா அக வடிவமாக உள்ளது. இவ்வான்மாக்களின் பலவாகிய பக்குவ நிலைக் கொப்ப அவ்வக வடிவின் புறத்தே மூன்று (அகப்புறம், புறம், புறப்புறம்) பேத தோற்றம் அளிக்கும் சூழ் உருவோடு உலகத்தில் தோன்றுகின்றன, இப்பிறவியிலே.
அறிவு விளக்கத்தாலும், கரணப் பண்பாட்டாலும், இந்திரிய தேக வளர்ச்சியாலும் ஆன்மாக்கள் பல்வேறு தோறம் கொண்டு உலகிடை வாழ்கின்றனவாம்.