Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.328.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து மூன்றாம் அதிகாரம்.
திணை.

8.
தயவே யுயர்திணை சாலுறு மிதனால்
வியவார் பிறநெறி வீறு.
328.

குறள் விளக்கம்.
இங்கு குறிக்கப்படுகின்ற சுத்த தயா ஒழுக்க நெறி உயர்திணையாய்ப் பொருந்தி நிறைவுற்றுள்ளதால், இந்நெறியே எவர்க்கும் அமையும். இவ்வுண்மையைக் கண்டு கொண்டவர்கள், மற்ற சமய மதங்களின் ஆற்றலையும், அவற்றால் அடையப் பெறும் பயன்களையும் விரும்பிக் கொள்ள மாட்டார்கள்.
ஆதலால், சர்வ சீவ தயா மார்க்கம் மனிதர்க்குரிய உயர்திணை எனப்பட்டுள்ளது.