Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.325.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து மூன்றாம் அதிகாரம்.
திணை.

.5.
உயர்திணையே மக்கட் குரித்தாம் மதமால்
அயல்நெறி மேவா தகல்.
325.

குறள் விளக்கம்.
உயர்திணையாகிய தயவு ஒழுக்கமே எல்லா மாக்களுக்கும் பொருந்தும் சன்மார்க்கமாம். ஆதலால் மற்ற கற்பனா நெறிகளின் சென்று தடையுற்று அழிதல் அறியாமையே.
மதம் என்பது மெய்ப்பொருள் அறிவே. சுத்த தயா ஒழுக்கத்தோடு கூடிய மெய்ப்பொருள் அறிவே அதீதமான மதம்.
உயர்திணை மனித இனம் முழுமைக்கும் இந்த தயா ஒழுக்க மார்க்கமே உரியது. ஆகையால், பிற சிறு நெறிகளை அடையாது நீங்கி இந்நெறி கொண்டு உய்தலே அறிவுடைமை.