Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.322.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்து மூன்றாம் அதிகாரம்.
திணை.

.2.
சாதி யிரண்டொழிய சாற்றுங்கால் வேறில்லை
ஆதியிய ரஃறிணை யாம்.
322.

குறள் விளக்கம்.
இச்சன்மார்க்கத்தில் உயிர்கள் இரு சாதியாகப் பிரித்துக் கூறப்படும். அவை உயர்திணை, அஃறிணை என்பனவேயாம். மற்றபடி உயர்ந்தவர் தாழ்ந்தவர், சைவர், அசைவர், கற்றவர் கல்லாதவர், ஆண், பெண் என்பன போன்ற இனப் பிரிவுகள் கொள்ளப்படமாட்டா.
சிறந்த திணை உடைய மாந்தர்களே உயர்திணை உயிர் எனவும், அஃது இல்லாத மற்றெல்லா உயிர்களும் திணை அற்றன (அல்+திணை) அஃறிணைஇ எனவும் கூறப்படும்.
உயர்திணை உயிராகிய மனிதன் தன் அருள் ஒழுக்கத்தால் எல்லாவற்றிற்கும் ஆதி ஆகிய கடவுட் சார்பு கொண்டு வாழ வல்லவன் ஆகின்றதால், இத்திணைக்கு ஆதி என்னும் அடைமொழி பொருத்தம் உடைத்தாம்.