Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.315.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம் அத்தியாயம்.
தன்னை மதியாமை.

5.
எவ்வுயிரும் அம்புவிமே லிம்மனித னாகியே
315.
எவ்வப் பிறப்பொழிக்கு மே.

குறள் விளக்கம்.
அல்லல் நிறைந்த பிறவிப் பிணியை ஒழித்து, ஆனந்த வாழ்வு பெறுவதற்கு எல்லா உயிர்களும், இவ்வெழில் நிறைந்த உலகில், பக்குவ மனிதப் பிறப்பு எடுத்தல் வேண்டும். மற்றெந்தப் பிறவியிலும், அருள் ஞானமும். கடவுள் அனுபவமும் உண்டாக வழி இல்லை.
ஆதலால், அவற்றால் துன்பப் பிறப்பை நீக்கி நிலையான இன்ப வாழ்வில் நிலவச் செய்தல் கூடா. இக் காராணத்தால்தான் இம்மனிதப் பிறவி மிக உயர்வானதாகச் சொல்லப்படுவது.