Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.314.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம் அத்தியாயம்.
தன்னை மதியாமை.

4.
இப்பிறப் பெய்திய யாவருந் தன்னினம்
314.
தப்பறக் கண்டான் தனித்து.

குறள் விளக்கம்.
இவ்வுலகில் தோன்றி உள்ள எல்லா மனிதர்களையும் ஓர் உரிமைச் சகோதரர்களாக, தன் இனத்தவர்களாக காண்கின்றான் தயா சன்மார்க்கி. இந்தப் பிழைபடா உயிர்க் காட்சியால்தான் யாவரிடத்தும் தடைபடாத் தயவு காட்ட முடிகின்றது.
இக்காட்சிக்கும் உல சகோதரத்துவ வாழ்விற்கும் தடையாய் இருந்தன, இருக்கின்றன சமய மத நெறிகள் யாவும். சுத்த சன்மார்க்கத்தில் அகிலமாம் தயவு ஓங்கும்.