Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.313,

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம் அத்தியாயம்.
தன்னை மதியாமை.

3.
ஒருபடித் தாமுயிரே உள்வளர்ச்சிக் கொப்ப
313.
வருமுரு கண்டான் மனு.

குறள் விளக்கம்.
மனித உயிர் பெற்ற பகுத்தறிவு கொண்டு, உயிர்கள் யாவும் ஒரு தன்மையனவே என்றும், அவை ஒவ்வொன்றின் உள் வளர்ச்சிக்கு ஒப்ப (அதாவது, புலனறிவுக்கு தக்க) தேகத்தைப் பெற்றுள்ளது என்றும் அறிந்து கொள்கின்றான் மனிதன்.
இதனால், மனிதன் எவ்வுயிரிடத்தும் பொது நோக்கத்தால் இரக்கம் கொண்டும், சிறப்பாக தன் இன மனித குலம் முழுமைக்கும் தயவு செய்து கொண்டு வாழக் கூடியவன் ஆகின்றான்.
மனு = மனிதன்.