Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.311.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

முப்பத்திரண்டாம் அதிகாரம்.

மனிதன்

1.
கருவி கரணங் கனிவுற நின்ற
வுருவிஃ துயர்வு வுடைத்து.
311

குறள் விளக்கம்.
கரண ஒழுக்கத்தில் முடிவாக மனத்தின் சிறப்பும், அதனால் பெறற்கு உரிய தெய்வ நிலைப் பேறும் ஓதப்பட்டன. இக்கரண ஒழுக்கத்திற்கு மேற்படி ஜீவ ஒழுக்கம் ஆகும். அச்சீவர்களில் மனங்காரணமாக சிறந்து விளங்கும் மனிதனைப் பற்றி இவ்வதிகாரத்தில் உரைக்கப்படுகின்றதாம்.
இம்மனிதப் பிறப்புத் தேகம் மிகச் சிறப்புடையதாக கொள்ளப்படுவதின் தத்துவம் யாதெனில், இந்திரிய ஒழுக்கத்தால் புறப்பக்குவமும், கரண ஒழுக்கத்தால் அகப்பக்குவமும் உண்டாகி, அம்பல நிலை கண்டு அங்கிருந்து உயிர்களை எல்லாம் உள்ளவாறு நோக்கி, உலகோடு கூடி வாழச் செய்வதுவே மனிதப் பண்பின் மாண்பாம்.