தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம் அத்தியாயம்.
தன்னை மதியாமை.
|
8.
|
சேர்ந்துள்ள வாழ்வைத் திருவுறத் தாங்கிநின்
|
308.
|
|
|
றார்ந்திடுக அன்பி னகம்.
|
|
குறள் விளக்கம்.
அன்புருவாகிய இறைவன், உண்மை அகத்திருந்து கண்டு கொள்ளப்படும். இவ்வன்பு வெளிப்பட வாழ்வதுவே திருவெல்லாம் பெற்றுத் திகழும் பெருவாழ்வாம்.
அன்பின் அகம் என்றது அகத்தொளிர் அன்புதான். இது நமது அம்பலத்தரசின் மெய்யுருவாகும் யாதெனில்,
இவ் அன்பு, கடவுளுடைய அடி முடியைக் குறிக்க வந்த தமிழ் முதல் எழுத்து அ-கரமும், ஈற்று எழுத்து ன-கர மெய்யும் கொண்டு, சிரநடு ப-கர மெய் வண்ணமாய், ஐ - வண்ண உகர உயிர்த்தொழில் புரிந்து கொண்டிருக்கக் காண்கின்றோம். (அ+ன்+ப்+உ = அன்பு).
இதனால்தான் நமது அக, அன்புருவே அக அம்பலத்தரசின் வடிவாக ஓதப்படுகின்றது.
அன்பு, நம் தமிழ் அன்புதானே பூர்ண கடவுள் உண்மையை அறிந்தடையக் காணும்படி தோற்றுவிக்கப்பட்டுள்ளதால், பிற மொழிகளில் நமது தமிழ் அன்பர்களுக்கு பற்று உண்டாகாது.
Write a comment