Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.306.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம் அத்தியாயம்.
தன்னை மதியாமை.

6.
மகிழா வருந்தா மருண் ணனினின்(று)
306.
அகிலத் திசைக்க அறம்.

குறள் விளக்கம்.
மலருள் நனி நின்று, அதாவது சிரநடு சிற்றம்பல மலர்த்தளியில் நன்றாக நிலைத்திருந்து கொண்டு, உலகில் தயா அறம் செய்தல் வேண்டும்.
புலனின்பங் கருதாது, அருளனுபவம் கருதிச் செய்யும் இவ்வறத்தால் உண்டாகும் இன்பமும், துன்பமும், அம்பல வாழ்நரை மகிழவும் வருந்தவும் செய்யாவாம்.