தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம் அத்தியாயம்.
தன்னை மதியாமை.
|
4.
|
உற்றார் உறவின் உதவுவரோ மெய்ப்பொருளைப்
|
304.
|
|
|
பெற்றார் மதியார் பிற. .
|
|
குறள் விளக்கம்.
பரம்பொருள் ஒன்றினையே மதித்து, அதனால் உலகியலில் வழங்கப்படுகின்ற நற்பொருளைக் கொண்டு வாழ்கின்ற நல்லோர், மற்ற ;பொருள்களின் இடத்து பற்று வைக்க மாட்டார்கள். அன்றியும் உலகவர்கள் பொய்ப் பொருள்களிலே பற்று மிகக் கொள்வார்கள். ஆதலின், அவர்கள் தயவோடு ஈயார்கள்.
அப்படிப்பட்ட பொருள்கள் இடத்தும் அவற்றைப் பற்றொடு காத்துக் கொண்டிருக்கும் சுற்றம் சூழ்நரிடத்தும் மதிப்பு வைப்பரோ மெய்யருட் செல்வர்கள் ?
ஏக தேச தயவினால் இரங்கிப் பிறருக்கு சிறிதளவு பொருள் கொடுப்பினும் அது மெய்ப்பொருள் ஆகுமா ?
ஆதலின், அதனை மதியார்கள், அருள் நன்முயற்சியால் ஈட்டும் பொருளே நல்லோர் மதிப்பது.
Write a comment