தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பத்தோராம் அத்தியாயம்.
தன்னை மதியாமை.
|
3.
|
தயவே சொரிகின்ற சன்மார்க்க ரிங்கு
உயவே வழிசெய்வார் உற்று.
|
303.
|
குறள் விளக்கம்.
மன்னுயிர் ஓம்பி அவை நலம் பெறத்தக்க உதவி புரிவர் தயா சன்மார்க்கர். இவர்கள் வழங்கும் தயவு, புறத்தோற்றத்தில் இனிய சொற்களாயினும் அல்லது ஒறுத்துத் திருத்தும் கடுஞ்சொற்களாயினும் அவைகளால் முடிவில் நன்மையே உண்டாகும்.
கடவுள் மறக்கருணையால் சீவர்களுக்குக் கடும் சோதனை ஈந்து மெய் இன்ப நிலைக்கு ஏற்றுவது போன்றதே சன்கார்க்கர் கடியும் முறையும்.
Write a comment