Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.300.

தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
முப்பதாம் அதிகாரம்.
மனோன்மணி.

10.
கூடிப் புருவநடு கோகனகச் சோதிகண்டு
ஆடிப் பெறுக அருள்.
300.

குறள் விளக்கம்.
நல்லுணவுச் சத்தால், சோம்பலும், நித்திரையும் இன்றி புருவ நடு மனம் ஒன்றி நிற்க, அருள் கிடைத்த அக்கணத்தே அகமலர்ச் சோதியாகிய அருள் ஒளி வெளிப்படும்.
தயவற்றார் காணும் சிறு ஜோதிக் காட்சியால் அகங்கரித்துக் களித்து இறுமாந்திட நேரும். அருளால் அகங்காரத்தை ஒழித்து உலகியலை நடத்தினால்தான், அருட் பேரனுபவத்தில் இன்புற்று இருக்கலாகும்.
கோகனகம் = தாமரை.
சோதிகண்டு ஆடல் என்பது = அருள் ஒளியுணர்வு அகத்தில் நிரம்பப் பெற வாழ்க்கை நடத்தல்.