Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-295.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பதாம் அதிகாரம்.
மனோன்மணி.

5.
பூட்டைத் திறக்கும் பொதுத்திறவு கோற்றயவு
நாட்டமது வொன்றென்றே நாட்டு.
295.

குறள் விளக்கம்.
மேற்குறித்த ஆன்மக் கண்ணாகிய பூட்டைத் திறப்பதற்கு உள்ள பொதுத் திறவு கோல் (Master Key) “ஓர்மைத் தயவே” ஆகும். இந்த ஓர்மைப்பட்ட தயவாகிய திறவுகோல், இவ்வான்மப் பூட்டைத் திறப்பதன்றி, மற்றெல்லாவற்றையும் திறந்து விடக்கூடிய திறவு கோலாக உள்ளதால் பொதுத் திறவு கோல் (Master Key) எனப்பட்டது.
தயவில்லா ஓர்மை என்னும் சாவிதான் தந்திர, யோக சாதனையால் கிடைப்பது. இதனால், கடவுள் வீட்டின் பூட்டைத் திறக்க முடியாது. கற்பனா ஆலயக் கதவின் பூட்டை மட்டும்தான் திறக்க முடியும்.