தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பதாம் அதிகாரம்.
மனோன்மணி.
|
4.
|
அகர வுகரம் அணியகரக் கண்ணே
புகலரிய மேல்வீட்டின் பூட்டு.
|
294.
|
குறள் விளக்கம்.
அகர வுகரம் சேர்ந்த யகரமாகிய ஆன்மாவே மனோன்மணியில் உள்ளிருந்து மலர்கின்ற ஒளியாகும். இவ்வான்மக் கண்ணே ஒரு பூட்டாகக் கூறப்பட்டது. இப்பூட்டைத் திறந்து உட்சென்றால்தான் கடவுள் வீடு அடையலாம்.
அகரம் = எட்டு,
உகரம் = இரண்டு,
இவ்வெட்டும், இரண்டும் சேர்ந்த பத்தே யகர ஆன்மா என்ப.
அகரம் – சூரியன், வலக்கண்.,
உகரம் – சந்திரன், இடக்கண்,
இவை சேரும் இடமாகிய புருவமத்திய யகரமாகிய
நெற்றிக் கண் அக்கினி மயம்.
அகரமாகிய கடவுள் உண்மையும், உகரமாகிய சுத்த மனோ உணர்வும் கூடியதே யகரமாகிய ஆன்மக் கண். இதனையே எட்டும் இரண்டும் கூடிய ஆன்ம லிங்கம் என்பர்.
எட்டோடு இரண்டு சேர்த்துப் பத்தாக எண்ணுதல் என்பது ஆன்மக் கண் திறக்கப் பெறுதலையே குறிக்கும். இந்தப் பூட்டைத் திறந்து கொண்டால்தான் கடவுள் உறையும், உயர் வீட்டினுள் சென்று உடன் உறையலாகும்.
Write a comment