Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-293.

தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
முப்பதாம் அதிகாரம்.
மனோன்மணி.

3.
படைப்பாதி யைந்தொழிலும் பாங்குடனே செய்யும்
அடர்சோதிக் கண்ணுண் டகம்.
293.

குறள் விளக்கம்.
அம்மனக் கண்ணிலே விரிகின்ற ஒளிக்குள்ளீடாய் கடவுட் ஜோதி பொருந்தி உள்ளது. இச்சோதியுட் சோதியே உலகில், ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து செயல்களையும் புரிந்து கொண்டுள்ளதாம்.
மாசிலா மனோன்மணிக்கு உள் நின்று ஐந்தொழில் வெளிப்பட்டுக் கொண்டே உள்ளதால், சீவ தேகாதி பிரபஞ்சமெல்லாம் விளங்குகின்றனவாம்.