Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.291.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
முப்பதாம் அதிகாரம்.
மனோன்மணி.

1.
அருவுரு வாமனம் அம்மணி யாகி
புருவ நடுநிற்கும் பூத்து.
291.

குறள் விளக்கம்.
உள்ளும் புறமும் உணர்ந்து உருவக முறையால் தெளிந்து கொண்டு, அவ்வகத்தையும் புறத்தையும் இணைக்கும் பாலம் என்னும் புருவ மத்தியில் மனம் நிலைத்த போது மனோன்மணி ஆகின்றது. இந்நிலை நின்று பயன் பெறவே இவ்வதிகாரம் மலர்கின்றதாம்.
மனம் உருவாகவும், அருவாகவும், உருவருவாகவும் உள்ள உண்மை எல்லாம் கடவுள் தன்மையோடு ஒத்துள்ளது. இது, தயவும் ஒருமையும் உண்டான போதுதான் விளங்கும். அதுவும், புருவ மத்தியில் தான் மனம் சலனம் ஒழிந்தபோது ஒளிமணி போல், நிவாத தீபம் போல் விளங்குவதாம்.