தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தொன்பதாம் அதிகாரம்.
மனோவுருவகம்.
|
9.
|
மீன்விழியோ மானதுவோ மெய்ஞ்ஞானத் தண்ணளிசேர்
ஊன்பழித்தா ருள்ளத் துரு.
|
289.
|
|
|
|
|
குறள் விளக்கம்.
தயவோடு கூடிய சத்திய ஞானிகளின் உள்ளம்,ஊன் உடம்பின் பற்றற்று ஒளிர்வதாம். அந்த சுத்த மனத்தை மீனின் கண்ணுக்கும், மானின் கண்ணுக்கும் ஒப்பிட்டுரைத்தல் உள்ளுணர்ந்தோர் உபாயம்.
மீன் கண் எப்பொழுதும் திறந்திருப்பதும், தனது முட்டைகளைத் தன் கண் நோக்காலே குஞ்களாகப் பொரிந்திடச் செய்வதும், தயவுடையார் பேரருட் கடைக்கண்ணின் தன்மையைக் குறிப்பனவாம். ஆதலின், மீனாட்சி அருளாட்சியே, இதுபோல், மானின் நோக்கும் மனத்தை உருகச் செய்வதால், இரக்கத்தின் அடையாளமே.
Write a comment